Sunday, December 6, 2009

என்ன தலைப்பு?

சும்மா இருக்கும்போது, இன்டர்நெட் தான் எல்லாமே எனக்கு. அப்படியே ஒரு நாள் கூகிள் கிட்ட, தமிழ்ல டைப்ப என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். விளைவு கூகிள் ட்ரான்ஸ்லேசன் அறிமுகம்! கன்னாபின்னா என்று தமிழ்ல மறுபடியும் தேடல். முடிவு: வருத்தபடாத வாலிபர் சங்கம், இட்லிவடை, சாரு, சொக்கன், பத்ரி, செல்வேந்திரன், கோவி, லக்கி, அதிஷா, கார்க்கி, டக்ளஸ், பீர்.

பீர் மற்றும் சொக்கன் அவர்களால் மேலும் பலரின் வலைபூக்களின் உரல் கிடைத்தது. எனக்கு சகோதரனையும், சகோதரியையும், பலரின் நட்பை பெற்று தந்ததும் இந்த வலைபூக்கள் தான். கல்லூரியின் போது எதற்கெல்லாம் பயன்படுத்த கூடாதோ, அதற்குத்தான் இணையம் என்னால் பயன்படுத்தபட்டது.(அது அறியா வயசு ஹி...ஹி... ). பின்னர் தான் இணையத்தின் பயன் அறிந்துகொள்ள முடிந்தது. இப்போவும் எதாவது படம்(அது இல்ல)டவுன்லோட், இல்லாட்டி யுடியூப்ல எதாவது வீடியோ தேடி பாக்க, என்று வெட்டியாவும் யூஸ் பண்ணிட்டுதான் இருக்கேன்.

திடீர்ன்னு யுடியூப்க்கு சிலமாதங்களா குவைத் மினிஸ்ட்ரி தடை போட்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!!! இனிமே நான் "ஜஸ்ட் ஃபார் லாப்ஸ், ப்ராங்க்ஸ், அஜ்ரம்" இதெல்லாம் எப்படி பார்க்க? இத எதுக்கு சொல்ல வந்தேன்!! ஆங்,. இதுமாதிரி வெட்டியா சர்ஃப் பண்ணும் போது நிறையா உபயோகமான சைட் கிடைக்கும். அப்படி கிடைத்தது தான் Metacafe . இதுவும் யுடியூப் மாதிரி தான். Metacafepro என்று ஒரு சாப்ட்வேர், இவங்களே இலவசமா தராங்க. அத நம்ம கம்ப்யூட்டர்ல இன்ஸ்டால் பண்ணியாச்சுன்னா டெய்லி அப்லோட் ஆகும் வீடியோஸ் அனைத்தும் ஆடோமேடிக்கா நம்ம சிஸ்டம்ல டவுன்லோட் ஆகிடும்.நிறையா ஆப்சன்ஸ் இதுல இருக்கு. எந்த நாட்டு வீடியோஸ் வேணும், கேம்ஸ், பிட்சர்ஸ் இப்படி நமக்கு எது தேவையோ அதை மட்டும் செலக்ட் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கலாம்.

அப்படி டவுன்லோட் பண்ணின வீடியோஸ் சில உங்களுக்காக. (இதுக்காடா நீ இவ்வளோ பேசுன!!!)

இது நம்மூரு BINGO



இது MENTOS



ஏதோ ஒன்னு



கே.வி.ஆனந்த் இத பார்த்து காபி அடிச்சிருப்பரோ?



அப்புறமா இன்று நானும், பீர் அண்ணனும், பினாத்தலாரை சந்திக்க போறோம். பிஸ்னஸ் ட்ரிப்பா குவைத் வந்திருக்கிறார் என்று நினைகிறேன். இரண்டு பதிவர்கள் சந்திக்க போகிறார்கள். நான் அவங்க என்ன பேசுறாங்க என்று கேட்க போகிறேன்.

6 comments:

பீர் | Peer said...

தலைப்பை ஆங்கிலத்தில் போட்டிருக்கலாமோ? :)

RAMYA said...

வணக்கமுங்கோ பதிவு நல்லா இருந்திச்சி!!

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு உங்க கதை. :)

பா.ராஜாராம் said...

intresting!

hayyram said...

சுவாரஸ்யமா இருக்கு.

regards
www.hayyram.blogspot.com

சௌந்தர் said...

இன்னும் நிறிய கதை இருக்கும் போல