Showing posts with label டைம் பாஸ்.. Show all posts
Showing posts with label டைம் பாஸ்.. Show all posts

Wednesday, September 16, 2009

நான்சி அஜ்ரம் - அரபிக்குயில்

ப்ளாக் ஆரம்பிச்சு ஒருமாசம் ஆச்சு. பதிவே போட முடியல. ஆணி அதிகமா இருக்கு. ஒரு சின்ன ஸ்க்ருவுக்கு கூட அப்ருவல் வாங்க சொல்லி இம்சை, முன்னாடி போன முட்டுவது, பின்னாடி வந்தா உதைப்பது, படுத்துகிறார் ஒரு எழுபது வயது கன்சல்டன்ட். இன்னும் டெக்னாலஜி லெவலா அப்டேட் ஆகாமல், ச்சே.. இருந்தும் ஒரு சிஸ்டம் கமிஷன் பண்ணி டேமேஜர்ட்ட நல்ல பேர் (எப்படியோ) வாங்கியாச்சு. இன்னும் ஏழு சிஸ்டம் கமிஷன் பண்ணனும். என்ன செய்ய போறாரோ மனுஷன்.

ரமழான் மாசத்துல டைம் நிறைய இருக்கும், மூணு பதிவாவது போடலாம் என்று நினைத்தேன். ஆனா அடிச்சார் பாருங்க ஆப்பு. இந்த மாதிரி ஆணிகள் அதிகம் இருக்கும்போது, பாட்டு தாங்க நமக்கு தோழி. அதுவும் டிரைவ் பண்ணிட்டே பாட்டு கேட்பது இருக்கே, அந்த சுகமே தனி. அப்படிதான் ஒரு நாள் ரேடியோல சூப்பர் அரபி பாட்டு கேட்டேன். அத பாடியது நான்சி அஜ்ரம். அதில் இருந்து நானும் அவரோடே விசிறி. உங்களுக்காக அவரை பற்றி சில தகவல்களும், போட்டோக்களும்.




நான்சி அஜ்ரம்






அம்மணி பிறந்தது லெபனான், வயது இருபத்தேழு. பன்னிரண்டு வயசுல நம்ம "சூப்பர் சிங்கர்" மாதிரி, அவுங்க நாட்ல நடந்த போட்டில கோல்ட் மெடல் வங்கிருக்கங்க.

அம்மணி மட்டும் அல்ல, குரலும் சும்மா கும்முன்னு இருக்கும்.


இந்த வீடியோ சும்மா சாம்பிள் தான். இவங்களோட " யா த தப் வ தல்லா " கேட்டிங்கன்னா சும்மா சொக்கி போவீங்க. அதோட உரலு இங்கே...

சாரி, உரல லிங்க் பண்ண தெரியல. பீர் அண்ணன் தான் சொல்லித்தரனும்.

இவுங்களோட எவர் கிரீன் ஹிட் ஆல்பம் " யா சலாம்" மிகவும் அருமையாய் இருக்கும். அது மட்டும் இல்ல அம்மணிதான் "கொக்க கோலாவின்" முதல் அரபு மற்றும் மத்திய கிழ்க்கு நாட்டின் பெண் ஸ்பான்சர் .

டிஸ்கி: விரைவில் என்னோட சிஸ்டம் பற்றி டெக்னிக்கல் பதிவு. அதுக்கு முன்னாள் பாலா இன்னும் நிறைய கத்துக்கணும். பீர் அண்ணா ரமழான் லீவு எத்தனை நாள்?