ரமழான் மாசத்துல டைம் நிறைய இருக்கும், மூணு பதிவாவது போடலாம் என்று நினைத்தேன். ஆனா அடிச்சார் பாருங்க ஆப்பு. இந்த மாதிரி ஆணிகள் அதிகம் இருக்கும்போது, பாட்டு தாங்க நமக்கு தோழி. அதுவும் டிரைவ் பண்ணிட்டே பாட்டு கேட்பது இருக்கே, அந்த சுகமே தனி. அப்படிதான் ஒரு நாள் ரேடியோல சூப்பர் அரபி பாட்டு கேட்டேன். அத பாடியது நான்சி அஜ்ரம். அதில் இருந்து நானும் அவரோடே விசிறி. உங்களுக்காக அவரை பற்றி சில தகவல்களும், போட்டோக்களும்.
நான்சி அஜ்ரம்
அம்மணி பிறந்தது லெபனான், வயது இருபத்தேழு. பன்னிரண்டு வயசுல நம்ம "சூப்பர் சிங்கர்" மாதிரி, அவுங்க நாட்ல நடந்த போட்டில கோல்ட் மெடல் வங்கிருக்கங்க.
அம்மணி மட்டும் அல்ல, குரலும் சும்மா கும்முன்னு இருக்கும்.இந்த வீடியோ சும்மா சாம்பிள் தான். இவங்களோட " யா த தப் வ தல்லா " கேட்டிங்கன்னா சும்மா சொக்கி போவீங்க. அதோட உரலு இங்கே...
சாரி, உரல லிங்க் பண்ண தெரியல. பீர் அண்ணன் தான் சொல்லித்தரனும்.
இவுங்களோட எவர் கிரீன் ஹிட் ஆல்பம் " யா சலாம்" மிகவும் அருமையாய் இருக்கும். அது மட்டும் இல்ல அம்மணிதான் "கொக்க கோலாவின்" முதல் அரபு மற்றும் மத்திய கிழ்க்கு நாட்டின் பெண் ஸ்பான்சர் .
டிஸ்கி: விரைவில் என்னோட சிஸ்டம் பற்றி டெக்னிக்கல் பதிவு. அதுக்கு முன்னாள் பாலா இன்னும் நிறைய கத்துக்கணும். பீர் அண்ணா ரமழான் லீவு எத்தனை நாள்?
8 comments:
நல்ல வாய்ஸ் அம்மணிக்கு!
நண்பன் பாலாவுக்கு,
உங்கள் இதுபோன்ற உபயோககரமான(?) பதிவுகள் தொடர என் வாழ்த்துக்கள்.
பாட்டைகேட்டாலே சும்மா அதிருது இல்ல.
அம்மணிய பத்தி நிறைய எழுத்தாளர்கள், பதிவர்கள் சிலாகிச்சு சொல்லியிருக்காங்க. அந்த வரிசையில நீங்களும் சேர்ந்திட்டீங்க பாலா :)
யூ டீயூப்ல நிறைய பாடல்கள் கிடைக்குது. நேரம் கிடைக்கும் போது பாருங்க
வருக, நல்வரவு வலைப்பக்கத்துக்கு.
அஜ்ரம் நல்ல அறிமுகம்.
பாலா.. மன்னிச்சுக்குங்க... ச்சே... எப்படி தவறவிட்டேன்னு தெரியல... சோம்பேறி.. சோம்பேறி...
ரமழான் லீவு 3 நாள் எடுத்தேன். முடிச்சிருச்சு... :(
லிங்க் விசயம் சிம்பிள் தான், ஞாயிறு பேசுவோம்.
அம்மிணி நல்லா இருக்கு. பதிவும்.
அஜ்ரம் நல்ல வஜ்ரம் பாய்ந்த கட்டைதான்...ஆனால் எத்தனை நாள் இதையே பார்ப்பது? விட்டுட்டு அடுத்ததுக்கு வாங்க பாஸ்...
//லிங்க் விசயம் சிம்பிள் தான், ஞாயிறு பேசுவோம்.//
கடைசி வரைக்கும் அந்த லிங்கு வரவே இல்ல :(
Post a Comment